கிரிக்கெட்

மும்பை வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் விலகல் + "||" + Mumbai fast bowler Cummins distortion

மும்பை வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் விலகல்

மும்பை வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் விலகல்
மும்பை வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார்.
மும்பை,

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஐ.பி.எல். தொடரில் இருந்து நேற்று விலகினார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் போது முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்ட கம்மின்ஸ், காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவதற்கு சில வாரங்கள் ஆகும் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஐ.பி.எல். போட்டியை துறந்துள்ளார். இவர் ரூ.5.4 கோடிக்கு மும்பை அணிக்கு வாங்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே முதலாவது ஆட்டத்தின் போது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவும் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி சென்னை அணிக்கு சேர்க்கப்படுகிறார்.