கிரிக்கெட்

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல் + "||" + Held in Chennai IPL to know about the Some interesting information

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல் கொடுக்கப்பட்டு உள்ளன. #IPL
சென்னை

ஐ.பி.எல் 11-வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணிக்கும் நடந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னிங்க்ஸில், வாட்சன், ராயுடு, பில்லிங்ஸ் மற்றும் ப்ராவோ ஆகியோர் 73 பந்துகளுக்கு 148 ரன்களை விளாசினர். மொத்த ஸ்ட்ரைக் ரேட் 202.73 ரெய்னா, டோனி, ஜடேஜா ஆகியோர் 47 பந்துகளை சந்தித்து எடுத்த ரன்கள் 50. 

ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டியை இன்றைய போட்டி சமன் செய்தது. இந்த போட்டியில் மொத்தம் 31 சிக்ஸர்கள் விளாசப்பட்டது.

இதற்கு முன் 2017ம் ஆண்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் 2010ல் நடைபெற்ற போட்டியில் 30 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது அதிகபட்சமாக இருந்தது.

அதிகபட்ச ஓட்டங்களை வெற்றிகரமாக சென்னை அணி சேஸ் செய்த இரண்டாவது பெரிய ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2012ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 206 ரன்களை சேஸ் செய்தது அதிகபட்சமாக உள்ளது. இரண்டையும் வெற்றிகரமாக சேஸ் செய்தது சென்னையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் 2010 ல் நடைபெற்ற போட்டியில் 193 ஓட்டங்களை சேஸ் செய்ததும், 2008ல் டெல்லி டேர் டெவில்ஸ் அணியுடனான போட்டியில் 188 ஓட்டங்களை சேஸ் செய்ததும் அதிகபட்சமாக உள்ளது.

கொல்கத்தா அணிக்கு அடித்த அதிகபட்ச ஓட்டங்களை துரத்திப்பிடித்ததில் இன்று நடைபெற்ற போட்டியில் 203 ஓட்டங்களை துரத்திப்பிடித்ததே முதலிடத்தில் உள்ளது. இதற்கு முன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 201 ஓட்டங்களை துரத்திப் பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

20வது ஓவரில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் 20 ரன்களை விட்டுக்கொடுத்து வினய் குமார் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் 19 ஓட்டங்களை கொடுத்து டிண்டாவும், 16 ஓட்டங்களை கொடுத்து மூன்றாவது இடத்தில் பிராவோவும், 13 ரன்களை கொடுத்து ஃபால்க்னர், நெஹ்ரா, மோகித் ஷர்மா ஆகியோர் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

200 ரன்களை சென்னை அணி சேஸ் செய்த போட்டிகளில் இரண்டிலும் கடைசி ஓவரை வீசியது வினய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் வினய் குமார் வீசிய பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தது ஜடேஜா தான் என்பதும், இன்றைய போட்டியில் கடைசி ஓவரை வீசிய வினய் குமாரின் பந்தில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்ததும் ஜடேஜாதான் என்பதும் சுவாரஸ்சிய தகவல்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. #AusvInd
2. 20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை தாண்டி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
3. வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய கோலி : இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி
இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.
4. ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்கள்
ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி நியூசிலாந்து வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
5. அசாருதீனுக்கு கவுரவம் பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம்
கொல்கத்தா இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அசாருதீனுக்கு கவுரவம் அளிதததர்கு பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம் வைத்துள்ளார்.