கிரிக்கெட்

காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா விலகல் - சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சி + "||" + Raina ruled out of CSK's next two games due to calf injury

காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா விலகல் - சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சி

காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா விலகல் - சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சி
ஐ.பி.எல். போட்டியில் காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா விலகியதால் சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். #SureshRaina #Injury
சென்னை,

சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11வது ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் 5 வது லீக் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், சென்னை அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்நிலையில், சென்னை அணி பேட்டிங் செய்யும்போது, சென்னை அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. இதனால், அவர் பெரிதும் அவதிக்கு உள்ளானார். 15-ம் தேதி பஞ்சாப் மற்றும் 20-ம் தேதி ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில், சிஎஸ்கே அணிக்காக 134 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா, முதல் முறையாக, இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் காரணமாக அவர் அடுத்து நடைபெறும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்சமயம் சுரேஷ் ரெய்னாவும் இரண்டு போட்டிகள் விளையாட முடியாமல் போனது சென்னை அணியை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.  காயம் காரணமாக ஓய்விலிருந்த டுபிளஸ்சி, முரளி விஜய் ஆகியோர் அடுத்தப் போட்டில் விளையாட தயாராக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.