சென்னை அணியின் அடுத்த 2 ஆட்டத்தில் ரெய்னா விலகல்


சென்னை அணியின் அடுத்த 2 ஆட்டத்தில் ரெய்னா விலகல்
x
தினத்தந்தி 12 April 2018 8:45 PM GMT (Updated: 12 April 2018 8:35 PM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஒரு ரன் எடுக்க வேகமாக ஓடுகையில் வலது பின்னங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி, 

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஒரு ரன் எடுக்க வேகமாக ஓடுகையில் வலது பின்னங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. காயம் குணமடைய 10 நாட்கள் வரை ஆகும் என்பதால் சென்னை அணியின் அடுத்த இரு ஆட்டங்களில் (15–ந்தேதி பஞ்சாப்புக்கு எதிராக, 20–ந்தேதி ராஜஸ்தானுக்கு எதிராக) அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி இதுவரை பங்கேற்றுள்ள 134 ஆட்டங்களிலும் களம் இறங்கிய ஒரே வீரர் 31 வயதான ரெய்னா தான். அவர் முதல் முறையாக சென்னை அணிக்கான ஆட்டத்தை தவற விடுகிறார்.

ஏற்கனவே உள்ளூர் சாதகமான சூழல் இழப்பு, பாப் டு பிளிஸ்சிஸ், முரளிவிஜய் காயத்தால் அவதி, தசைப்பிடிப்பால் தொடரில் இருந்து ஆல்–ரவுண்டர் கேதர் ஜாதவ் விலகல் இப்படி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்சுக்கு ரெய்னா ஆட முடியாமல் போவது மேலும் ஒரு பின்னடைவாகும்.


Next Story