ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்


ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
x
தினத்தந்தி 13 April 2018 4:51 PM GMT (Updated: 13 April 2018 4:51 PM GMT)

பெங்களூரு அணிக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணையித்துள்ளது. #IPL

பெங்களூரு,

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை துவங்கியது. 

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அகர்வால் 15 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஆரோன் ஃபிஞ்ச் டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். இதனிடையே பஞ்சாப் அணியின் ராகுல் (47 ரன்கள்), அஸ்வின் (33 ரன்கள்) மற்றும் கருண் நாயரை (29 ரன்கள்) தவிர அனைத்து வீரர்களுமே பெங்களூரு அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் இந்த ஆட்டத்திலும் வெறும் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப்அணியின் ரன் வேகம் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை. 

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19.2 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், வோக்ஸ் மற்றும் சகால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 

Next Story