டி.வி. ஒளிபரப்பு உரிமம் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருவாய்


டி.வி. ஒளிபரப்பு உரிமம் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருவாய்
x
தினத்தந்தி 13 April 2018 8:23 PM GMT (Updated: 13 April 2018 8:23 PM GMT)

ஆஸ்திரேலியாவில் உள்ளூரில் அடுத்த 6 ஆண்டுகள் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் மற்றும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் உள்ளூரில் அடுத்த 6 ஆண்டுகள் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் மற்றும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை செவன் நெட்வொர்க் மற்றும் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் கூட்டாக ரூ.6 ஆயிரம் கோடிக்கு பெற்றுள்ளன. இந்த உரிமத்தை முந்தைய 5 ஆண்டுகள் சேனல்9 மற்றும் டென் நிறுவனங்கள் ரூ.2,990 கோடிக்கு தான் பெற்றிருந்தன. பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வருவாயிலும் எதிரொலிக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஒளிபரப்பு உரிமத்தொகை இரண்டு மடங்கு எகிறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடனான சேனல்9 நிறுவனத்தின் 40 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது.


Next Story