கிரிக்கெட்

ஐதராபாத் அணி தடுமாற்றத்துடன் தொடக்கம் + "||" + Start with the awkwardness of the Hyderabad team

ஐதராபாத் அணி தடுமாற்றத்துடன் தொடக்கம்

ஐதராபாத் அணி தடுமாற்றத்துடன் தொடக்கம்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி முதல் 10 ஓவா்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. #IPL2018 #MI #SRH
மும்பை, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை  வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதிவருகின்றன.

இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப மும்பை அணி முயற்சிக்கும். அதே நேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி சரிவில் இருந்து மீண்டு வர ஐதராபாத் அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

இதில் டாஸ் வென்ற  மும்பை அணியின் கேப்டன் ரோகித் சா்மா முதலில் எதிரணியை பேட்டிங் செய்ய பணித்தார். பின்னா் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரா்களான தவானும் கேப்டன் வில்லியம்சனும்  ஆடகளத்தில் தோன்றினா். பின்னா்  ஜஸ்பிரித் பும்ராவின் முதல் ஓவரிலேயே வில்லியம்சன் 2 பவுண்டரிகளை அடித்து தங்கள் அணியின் ரன் கணக்கை தொடங்கி வைத்தார். மறுபுறம் மெக்லெனஹான் தவானுக்கு போட்ட மூன்றாவது பந்து தவானின் ( 5 ரன்கள், 6 பந்துகள்)காலை பதம் பார்த்தது. அடுத்த பந்திலே  தவான் போல்டாக பின்னா் வந்த விருத்திமான் சஹா (0) இரண்டு பந்து மட்டும் பிடித்த நிலையில் கீப்பா் கையில் கேட்ச் கொடுத்து அவரும்  பெவிலியன் திரும்பினார். இதனால் மும்பை அணி ரசிகா்கள் அனைவரும ஆரவாரம் செய்தனா்.    

இவா்களுக்கு அடுத்து மனிஷ் பாண்டே 16 ரன்கள்(11 பந்துகள்)  கேப்டன் வில்லியம்சனுடன் கைக்கோர்த்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிலையில், இவா்களின் முயற்சியை ஹர்திக் பாண்ட்யா கனவாக்கினார். பின்னா் ஐதராபாத்தின் ஆல் ரவுண்டா் ஷகிப் அல்-ஹசன் களத்தில் பிரேவேசிக்க  சூர்யகுமார் கையில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னா் அதிரடி மன்னா் யூசுப் பதான் இறங்கி விளையாடி வந்தநிலையில், ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேப்டன் வில்லியம்சன் 29 ரன்கள் (21 பந்துகள்) கீப்பா் கையில் கேட்ச் கொடுத்து  ரசிகா்களை ஏமாற்றினார் தற்போது ஐதராபாத் அணி 10 ஓவா்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது