கிரிக்கெட்

சென்னை அணி வீரர் தீபக் சாஹர் காயம் + "||" + Chennai team player Deepak Sagar injury

சென்னை அணி வீரர் தீபக் சாஹர் காயம்

சென்னை அணி வீரர் தீபக் சாஹர் காயம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தசைப்பிடிப்பு காயத்தால் பாதிக்கப்பட்டார்.
புனே, 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தசைப்பிடிப்பு காயத்தால் பாதிக்கப்பட்டார். தனது 3-வது ஓவரில் முதல் பந்தை வீசுகையில் காயத்தை சந்தித்த அவர் அத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். தீபக் சாஹரின் காயம் குணமடைய 2 வாரம் பிடிக்கும் என்று தெரிகிறது. கடந்த 7 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சாஹரின் காயம் சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.