கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம் + "||" + Test cricket ranking: Indian team continues First

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முடிவுகளின் தொகுப்பு அடிப்படையில் அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி (125 புள்ளிகள்) 4 புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது. தென்ஆப்பிரிக்க அணி (112 புள்ளிகள்) 5 புள்ளிகளை இழந்து 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி (106 புள்ளிகள்) 6 புள்ளிகள் அதிகரித்து 3-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (102 புள்ளிகள்) 4-வது இடத்திலும், இங்கிலாந்து அணி (98 புள்ளிகள்) ஒரு புள்ளி அதிகரித்து 5-வது இடத்திலும், இலங்கை அணி (94 புள்ளிகள்) ஒரு புள்ளி சரிந்து 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (86 புள்ளிகள்) 2 புள்ளி சறுக்கி 7-வது இடத்திலும், வங்காளதேச அணி (75 புள்ளிகள்) 4 புள்ளிகள் உயர்ந்து 8-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி (67 புள்ளிகள்) 5 புள்ளி சரிந்து 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி (2 புள்ளி) ஒரு புள்ளி அதிகரித்து 10-வது இடத்திலும் உள்ளன.