கிரிக்கெட்

ஐபிஎல் போட்டி: கொல்கத்தா அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயத்தது சென்னை அணி + "||" + Kolkata Bowlers Peg Back Chennai Batsmen

ஐபிஎல் போட்டி: கொல்கத்தா அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயத்தது சென்னை அணி

ஐபிஎல்   போட்டி: கொல்கத்தா அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயத்தது சென்னை அணி
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018
கொல்கத்தா,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.  சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லை. 

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக தோனி 43 , வாட்சன் 36 ரெய்னா 31 ரன்கள் எடுத்துள்ளனர். 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. டு பிளிசிஸ், 5. டோனி, 6. ஜடேஜா, 7. வெயின் பிராவோ, 8. கரண் சர்மா, 9. ஹர்பஜன் சிங், 10. லுங்கி நிகிடி, 11. கேஎம் ஆசிப்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கிறிஸ் லின், 2. சுனில் நரைன், 3. ராபின் உத்தப்பா, 4. ரிங்கு சிங், 5. தினேஷ் கார்த்திக், 6. ஷுப்மான் கில், 7. ரஸல், 8. ஷிவம் மவி, 9. சாவ்லா, 10. மிட்செல் ஜான்சன், 11. குல்தீப் யாதவ்.

ஆசிரியரின் தேர்வுகள்...