கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பகல்–இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா மறுப்பு + "||" + Against the Australian team Play day-night test match India denies

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பகல்–இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா மறுப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பகல்–இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா மறுப்பு
இந்திய கிரிக்கெட் அணி, வருகிற டிசம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி, வருகிற டிசம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை பகல்–இரவு டெஸ்ட் போட்டியாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருந்தது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பகல்–இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அடிலெய்டில் நடத்த திட்டமிடப்பட்ட பகல்–இரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராக இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து விட்டது. எனவே அந்த டெஸ்ட் போட்டி பகல் போட்டியாக நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...