கிரிக்கெட்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி: ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான் + "||" + IPL 2018, KKR vs MI: SRK Apologises To Fans For Kolkata Knight Riders' ''Lack Of Spirit''

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி: ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி: ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி அடைந்ததையடுத்து ரசிகர்களிடம் ஷாருக்கான் மன்னிப்பு கோரியுள்ளார். #IPL #SRK
கொல்கத்தா, 

பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின்  இணை உரிமையாளராக உள்ளார். நடப்பு சீசனில் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா அணி, நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 

சொந்த மைதானத்திலேயே படுதோல்வியை கொல்கத்தா அணி சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில், கொல்கத்தா அணியின் மோசமான தோல்விக்கு ரசிகர்களிடம் ஷாருக்கான் மன்னிப்பு கோரியுள்ளார். 

தனது டுவிட்டரில் ஷாருக்கான் வெளியிட்டுள்ள பதிவில், “ ‘விளையாட்டு என்பது உத்வேகத்துடன் (Spirit) தொடர்புடையது. வெற்றி தோல்வியால் அது பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக  ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நேப்பியர்; சூரிய ஒளியால் பேட்ஸ்மேன்களுக்கு இடையூறு! போட்டி அரை மணி நேரம் பாதிப்பு
சூரிய ஒளியால் பேட்ஸ்மேன்களுக்கு இடையூறு ஏற்பட்டதால், நேப்பியர் ஒருநாள் போட்டி அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
2. இந்திய அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை சேர்த்துள்ளது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.
4. வீழ்வோம் என்று நினைத்தாயோ...!
சென்னையில் பெய்ய வேண்டிய மழை சிட்னியில் பெய்து தொலைத்து விட்டது. இந்தியா ஆஸ்திரேலியாவின் மென்னியைப் பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் மழை ஆட்டத்தின் மென்னியையே பிடித்து விட்டது.
5. வங்காளதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஆட சுமித்துக்கு தடை
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை