கிரிக்கெட்

அஸ்வினால் சேவாக்குடன் வார்த்தை மோதல்? பிரித்தி ஜிந்தா மறுப்பு + "||" + Conversation between Viru and me blown out of proportion: Preity Zinta denies blasting Sehwag after KXIP loss

அஸ்வினால் சேவாக்குடன் வார்த்தை மோதல்? பிரித்தி ஜிந்தா மறுப்பு

அஸ்வினால் சேவாக்குடன்  வார்த்தை மோதல்? பிரித்தி ஜிந்தா மறுப்பு
அஸ்வினால் சேவாக்குடன் வார்த்தை மோதல் இல்லை என்று பிரித்தி ஜிந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மும்பை 

மும்பை மிரர் வெளியிட்டு உள்ள செய்தியில் சேவாக்குக்கும், பிரித்தி ஜிந்தாவுக்கும் மோதல் நடந்ததாக கூறி உள்ளது. அது வெளியிட்டு உள்ள செய்தியில் ,

கடைசியாக களமிறங்கிய 5 போட்டிகளில் பஞ்சாப் 3 போட்டிகளில்  தோற்றது, இது அணி உரிமையாளர்   பிரித்தி ஜிந்தாவுக்கு கோபத்தை கொடுத்தது.  இதனால்  பஞ்சாப் அணி வீரர்கள் அறைக்கு சென்றார்.  அங்கிருந்த ஆலோசகர் சேவாக்கிடம், ‘அஸ்வினை ஏன் முன்னதாக களமிறக்கினீர்கள்’ என கேட்டதாக கூறப்படுகிறது. 

சூழ்நிலையை புரிந்து கொண்ட சேவாக்  அமைதி காத்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து கோபமாக பேசிய அவர்,‘ வெற்றி பெறும் அணியில் தொடர்ந்து தேவையில்லாமல், மாற்றங்கள் செய்வதால் தான் தோற்க நேரிடுகிறது,’ என, சேவாக் மீது குற்றம் சுமத்தினார். 

பிரித்தியின் இந்த செயல் குறித்து, மற்றொரு உரிமையாளரிடம் பேசிய சேவாக்,‘ கிரிக்கெட் நடவடிக்கையில் அவர், தலையிட வேண்டாம், விலகி இருக்கச் சொல்லுங்கள்,’ என கூறியதாக தெரிகிறது.

இது தவிர, தொடர் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், இவ்விஷயத்தை பெரிதுபடுத்தினால், வீரர்கள் கவனம் சிதறிவிடும் என்பதால், சேவாக், தொடர்ந்து அமைதியாக உள்ளாராம்.  இந்த சீசனுடன்  பஞ்சாப் அணியுடனான, தனது 5 ஆண்டுகால ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவும் சேவாக் முடிவு செய்துள்ளதாக  கூறப்படுகிறது என அதில்  கூறப்பட்டு உள்ளது.

ஆனால் இதனை தற்போது   பிரிந்த்தி ஜிந்தா மறுத்து உள்ளார்.

மும்பை மிரர்  மீண்டும் தவறு செய்து உள்ளது. ஏனெனில் நாங்கள் ஊடகம் இல்லை. கட்டுரைகளை எழுதுவதற்கு அவர்கள் பணம் தருகிறார்கள்,  எனக்கும் வீரேந்திர சேவாக்கு, ஒரு மோதல் நடந்ததாகவும் நான்  வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளேன். வாவ் என குறிப்பிட்டு உள்ளார்.