கிரிக்கெட்

டி வில்லியர்ஸ் பிடித்த சூப்பர்மேன் கேட்ச்: பிரமித்த ரசிகர்கள் + "||" + AB De Villiers Just Took The Best Catch You'll Ever See

டி வில்லியர்ஸ் பிடித்த சூப்பர்மேன் கேட்ச்: பிரமித்த ரசிகர்கள்

டி வில்லியர்ஸ் பிடித்த சூப்பர்மேன் கேட்ச்: பிரமித்த ரசிகர்கள்
ஐதராபாத் அணிக்கு எதிராக டி வில்லியர்ஸ் பிரமிக்கத்தக்க வகையில் அந்தரத்தில் துள்ளி பிடித்த கேட்ச் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
பெங்களூரு,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 51-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில், பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

முன்னதாக, ஐதராபாத் அணியின்,  துவக்க வீரர் ஹேல்ஸ், அடித்த பந்தை எல்லைக்கோட்டருகே நின்று டி வில்லியர்ஸ் பிடித்த கேட்ச், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஒற்றைக்கையில், துள்ளி குதித்து டிவில்லியர்ஸ் பிடித்த கேட்ச் ஒரு நொடி, மைதானத்தை அதிரவைத்தது. 

டி வில்லியர்ஸ் பிடித்த அந்த கேட்ச் அடங்கிய வீடியோ, சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான டி வில்லியர்ஸ் பேட்டிங்கில் கலக்கியதோடு, ஃபீல்டிங்கிலும் அசாத்தியமுறையில் செயல்பட்டதை சுட்டிக்காட்டி, சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள், புகழ்ந்து வருகின்றனர். முன்னாள் வீரர்கள் பலரும் டி வில்லியர்ஸை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.


 
பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸை ”சூப்பர்மேன்” என வர்ணித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   முன்னதாக டி வில்லியர்ஸ் பேட்டிங் செய்யும் போது, லெக் சைடில்  அடித்த ஒரு சிக்சர் மைதானத்திற்கு வெளியே பறந்தது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து விளையாடுவீர்களா? டி வில்லியர்ஸ் பதில்
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதா? இல்லையா? என்பது பற்றி டி வில்லியர்ஸ் முதன் முறையாக மவுனம் கலைத்துள்ளார். #IPL #ABdeVilliers
2. ஐபிஎல் கிரிக்கெட்; கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL #KKR
3. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பந்து வீச முடிவு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. #IPL
4. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL
5. சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட்: ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. #IPL #ChepaukStadium