கிரிக்கெட்

11-வது ஐபிஎல் போட்டி: யார் யாருக்கு என்ன விருது முழு விபரம் + "||" + IPL 2018 - Orange Cap, Purple Cap, Best Catch, Emerging Player, MVP: Complete list of awards

11-வது ஐபிஎல் போட்டி: யார் யாருக்கு என்ன விருது முழு விபரம்

11-வது ஐபிஎல் போட்டி: யார் யாருக்கு என்ன விருது முழு விபரம்
11-வது ஐபிஎல் போட்டியில் யார் யாருக்கு என்ன விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறித்து முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்த வருடம் ஆட்ட நாயகன் விருது ஷேன் வாட்சனுக்கும் தொடர் நாயகன் விருது சுனில் நரைனுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் போட்டியில் இதுவரை ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது பெற்றவர்களின் முழுப்பட்டியல்:

ஐபிஎல்: தொடர் நாயகன்

2008 - ஷேன் வாட்சன்
2009 - ஆடம் கில்கிறிஸ்ட்
2010 - சச்சின் தெண்டுல்கர்
2011 - கிறிஸ் கெய்ல்
2012 - சுனில் நரைன்
2013 - ஷேன் வாட்சன்
2014 - கிளென் மேக்ஸ்வெல்
2015 - ஆண்ட்ரே ரஸ்ஸல்
2016 - வீராட் கோலி
2017 - பென் ஸ்டோக்ஸ்
2018 - சுனில் நரைன்

ஐபிஎல்: ஆட்ட நாயகன்

2008 - யூசுப் பதான்
2009 - அனில் கும்ப்ளே
2010 - சுரேஷ் ரெய்னா
2011 - முரளி விஜய்
2012 - மன்வின்தர் பிஸ்லா
2013 - கிரோன் பொலார்ட்
2014 - மணிஷ் பாண்டே
2015 - ரோஹித் சர்மா
2016 - பென் கட்டிங்
2017 - கிருணாள் பாண்டியா
2018 - ஷேன் வாட்சன்


1.) சிறந்த கேட்ச் பிடித்த வீரர்- டிரெண்ட் போல்ட் ( டெல்லி) . 

2.) வளர்ந்து வரும் இளம் வீரர் மற்றும் ஸ்டைலிஷ் பிளேயர் விருது- ரிஷப் பண்ட் ( டெல்லி) .

3) அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்- ஆண்ட்ரு டை (பஞ்சாப்) 

4.) சூப்பர் ஸ்ட்ரைகர் மற்றும் மதிப்புமிக்க வீரருக்கான விருது - சுனில் நரைன் (கொல்கத்தா) 

5) நியாயமாக விளையாடிய அணி  மும்பை இந்தியன்ஸ் 

6) சிறப்பாக யோசிக்கும் வீரருக்கான விருது- தோனி (சென்னை)