கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாக அப்ரிடி திட்டவட்ட அறிவிப்பு + "||" + Shahid Afridi reveals his plans regarding a possible return to international cricket

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாக அப்ரிடி திட்டவட்ட அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாக அப்ரிடி திட்டவட்ட அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #ShahidAfridiRetirement
லண்டன்,

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஐசிசி உலக லெவன் அணியும், வெஸ்ட்இண்டீஸ் அணியும் சமீபத்தில் மோதின. இதில் 72 ரன்கள் வித்தியாசத்தில் உலக லெவன் அணி தோல்வியை தழுவியது.  இந்த போட்டியில் உலக லெவன் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி பொறுப்பு வகித்தார். 

இந்நிலையில் அப்ரிடி இந்த போட்டிக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். அப்ரிடி அறிவிப்பை அடுத்து மைதானத்திலிருந்த வீரர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து மரியாதை செய்தனர். 

இதற்கு முன் அப்ரிடி பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஐந்து முறை அறிவித்துள்ளார். இவ்வாறு அப்ரிடி அறிவிப்பது 6-வது முறையாகும். இருப்பினும் மீண்டும், மீண்டும் தனது முடிவை மாற்றி அப்ரிடி விளையாடி வந்தார். ஆனால், இந்த முறை, சர்வதேச போட்டிகளில் இதுவே எனது கடைசி போட்டியாகும் என அவர் உருக்கமாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்கும் கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும். அதிகமான வயது, காயத்தால் இனி என்னால் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த இயலாது. அதனால், இதுதான் நான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும். கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடைசிப் போட்டியை விளையாடுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.