கிரிக்கெட்

ஜோஸ் பட்லரின் பேட் கைப்பிடியில் ஆபாச வார்த்தை + "||" + England batsman in hot water for offensive bat message

ஜோஸ் பட்லரின் பேட் கைப்பிடியில் ஆபாச வார்த்தை

ஜோஸ் பட்லரின் பேட் கைப்பிடியில் ஆபாச வார்த்தை
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரின் பேட் கைப்பிடியில் எழுதப்பட்டிருந்த ஆபாச வார்த்தையால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்து வீரரான ஜோஸ் பட்லர், நடந்து முடிந்த ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். ஐபிஎல்லின் முதல் பாதியில் நடுவரிசையில் களமிறங்கியபோது சரியாக விளையாடத  பட்லர், தொடக்க வீரராக களமிறங்கிய பிறகு அடித்து நொறுக்கினார்.

ராஜஸ்தான் அணி பிளே ஆபிற்கு தகுதி பெற்றதற்கு பட்லரின் அதிரடியான ஆட்டம் மிக முக்கியமான காரணம். ஐபிஎல்லுக்கு பிறகு பாகிஸ்தான் அணியுடன் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றில் பாகிஸ்தானும் மற்றொன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பட்லர் பயன்படுத்திய பேட்டில் ஆபாச வார்த்தை எழுதப்பட்டிருந்தது. இது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஜோஸ் பட்லர், தமது பேட்டில் எழுதப்பட்டுள்ள இந்த வார்த்தையை பார்க்கும் போது, மைதானத்தில் மிக இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் சிறப்பாக விளையாட தூண்டும் என்பதற்காகவே அப்படி எழுதி வைத்ததாக தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.
2. அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? : ஸ்ரீசாந்த் குமுறல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம் அடித்து உள்ளார்.
4. அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில் இன்னிங்சை தொடங்குகிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
5. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் ஒரே திசையில் அடித்த இளம் வீரர்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை ஒரே திசையில் விளாசி அசத்தியுள்ளார்.