கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‘ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்’ + "||" + One day cricket match 'In every innings Using 2 new balls will lead to disaster '

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‘ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்’

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‘ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்’
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

புதுடெல்லி, 

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த போட்டியில் பந்து வீச்சாளர்களால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 2011–ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்தலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதிமுறையில் திருத்தம் செய்தது. இதனால் தற்போது ஒருநாள் போட்டியில் 400 ரன்கள் குவிப்பது என்பது எளிதாகி விட்டது.

ஒருநாள் போட்டியில் செய்யப்பட்ட இந்த விதிமுறை மாற்றத்துக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது ஆட்டத்தை பேரழிவுக்கு கொண்டு செல்வதற்குரிய சரியான அறிகுறியாகும். ஒவ்வொரு பந்தும் தேய்ந்து பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்வதற்கும், சுழல விடுவதற்கும் அதிக நேரம் பிடிக்கும். இதனால் ரிவர்ஸ் ஸ்விங்கையும், ரன்களை விட்டுக்கொடுக்காத கடைசி கட்ட ஓவர்களையும் நம்மால் நீண்ட காலமாக பார்க்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

தெண்டுல்கரின் கருத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஆகியோரும் வரவேற்றுள்ளர். இது பற்றி விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘புதிய விதிமுறை பந்து வீச்சாளர்களுக்கு பாதகத்தை அதிகரிப்பதாகும். நான் ஒருநாள் போட்டியில் விளையாட வருகையில் ஒரு புதிய பந்து தான் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இதனால் இன்னிங்சின் பின் பாதியில் ரிவர்ஸ் ஸ்விங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது பேட்ஸ்மேன்களுக்கு அதிக சவாலாக இருந்தது’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிக்பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி ‘சாம்பியன்’
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
2. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார்.
4. இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி 425 ரன்கள் குவிப்பு கார்னிவர் சதம் அடித்தார்
நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா, ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
5. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தியது, நியூசிலாந்து மார்ட்டின் கப்தில் சதம் அடித்தார்
நியூசிலாந்து–வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...