கிரிக்கெட்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 3-வது வெற்றி + "||" + Triangular 20 Oversight Cricket: Australia's 3rd win

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 3-வது வெற்றி

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 3-வது வெற்றி
ஜிம்பாப்வேயில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஹராரேயில் நேற்று நடந்த 6–வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–ஜிம்பாப்வே அணிகள் மோதின.

ஹராரே,

ஜிம்பாப்வேயில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஹராரேயில் நேற்று நடந்த 6–வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–ஜிம்பாப்வே அணிகள் மோதின. சம்பிரதாய மோதலான இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாலோமன் மிர் 63 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 56 ரன்கள் (38 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சருடன்) எடுத்தார். இந்த போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி பெற்ற 3–வது வெற்றி இதுவாகும். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


ஆசிரியரின் தேர்வுகள்...