கிரிக்கெட்

தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை + "||" + MS Dhoni Birthday: Wishes pour in for Captain Cool on 37th birthday

தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை

தோனிக்கு இன்று பிறந்த நாள்:  சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். #Dhoni
ராஞ்சி, 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான தோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தற்போது, இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவதால், இங்கிலாந்தில் உள்ள தோனி, அங்கு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். 

தோனியின் மனைவி சாக்‌ஷி தனது கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல், சக வீரரான சுரேஷ் ரெய்னாவும், தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பிறந்த நாள் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

அதேபோல், சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.  சமூக வலைதளங்களில் #HappyBirthdayMSDhoni  என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

2004 -ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் மூன்று வித தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி தன்வசம் வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
2. தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
3. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
4. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு
இந்தியா மிக முக்கிய நட்பு நாடு எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாரக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
5. சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை
சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை வழங்கி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...