டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது: கம்பீர் சொல்கிறார்


டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது: கம்பீர் சொல்கிறார்
x
தினத்தந்தி 19 July 2018 8:08 AM GMT (Updated: 19 July 2018 8:08 AM GMT)

டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது என்று கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். #Dhoni

புதுடெல்லி,

டோனி களமிறங்கி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அதிகமான நேரம் எடுத்துக்கொள்வதாலும், அதிகமான பந்துகளை வீணாக்குவதாலும் மற்ற 
பேட்ஸ்மேன்களுக்குத்தான் அதிகமான நெருக்கடி ஏற்படுகிறது என்று இந்திய அணியில் இருந்து சமீப காலமாக ஓரம் கட்டப்பட்டுள்ள கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

கம்பீர் கூறியதாவது:- ''இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகிளிலும் டோனி விளையாடிய விதம் அவரின் வழக்கமான ஆட்டமாக இல்லை.  களத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக ஏராளமான பந்துகளை டோனி சந்தித்தார். ரன்கள் எடுப்பதில் டோனி ஆர்வம்  காட்டவில்லை.

டோனி இதுபோன்ற மந்தமாகவும், அதிகமான பந்துகளை வீணடிப்பதும், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்குத்தான் அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்கும். கடந்த இருபோட்டிகளிலும் டோனியின் விளையாட்டை நான் குறை கூறவில்லை. அவர் இன்னும் அதிகமான உத்வேகத்துடன் பந்துகளை வீணாக்காமல்,  சுறுசுறுப்பாக பேட் செய்ய வேண்டும். 

ஒருவீரர் களத்திற்கு வந்தவுடன் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அதிகமான நேரத்தையும், பந்துகளையும் வீணாக்கக்கூடாது. டோனி களமிறங்குவதே எதிரணியின் பந்துவீச்சை அடித்துச் சிதறடிப்பதற்குத்தான். ஆனால், டோனி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாடுவது வேதனைக்குரியதாகும்.டோனி பேட்டிங் மீது அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story