கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள் + "||" + In TNPL cricket Today's matches

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
இடம்: நத்தம், நேரம்: பிற்பகல் 3.15 மணி‘ஹாட்ரிக

மதுரை பாந்தர்ஸ்– தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

இடம்: நத்தம், நேரம்: பிற்பகல் 3.15 மணி

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி தூத்துக்குடி

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக திகழும் கவுசிக் காந்தி தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் காஞ்சி வீரன்சையும், 2–வது ஆட்டத்தில் கோவை கிங்சையும் பதம் பார்த்தது. ‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி அந்த அணி களம் இறங்குகிறது. அதே சமயம் 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ள மதுரை பாந்தர்ஸ் அணி, தூத்துக்குடி அணிக்கு எல்லா வகையிலும் சவால் அளிக்க தயாராகி வருகிறது. அந்த அணியில் அருண் கார்த்திக், கேப்டன் ரோகித், தலைவன் சற்குணம், சந்திரன் நல்ல நிலையில் உள்ளனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ்– காஞ்சி வீரன்ஸ்

இடம்: நத்தம், நேரம்: இரவு 7.15 மணி

3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி (மதுரை, கோவை கிங்சுக்கு எதிராக), ஒரு தோல்வி (திருச்சிக்கு எதிராக) கண்டுள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றிப்பயணத்தை நீட்டிப்பதில் தீவிரமாக உள்ளது. விக்கெட் கீப்பர் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சதுர்வேத், விவேக் உள்ளிட்டோர் பேட்டிங்கில் மிரட்டுகிறார்கள். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு திண்டுக்கல் அணிக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.

அதே நேரத்தில் தனது முதல் 2 ஆட்டங்களிலும் (தூத்துக்குடி, காரைக்குடி காளைக்கு எதிராக) தோல்வியை தழுவிய பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றிகணக்கை தொடங்கும் முனைப்புடன் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆட்டத்திலும் தோல்வி அடைந்தால், அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும் என்பதால் காஞ்சி வீரன்ஸ் அணியினர் கடும் முயற்சியை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ்)தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி, கேரளாவை சாய்த்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.
2. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரர் கம்பீர் சதம் அடித்தார்.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 249 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
5. தேசிய அணியில் இடம் பெறாத போது டோனி, தவான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாதது ஏன்? கவாஸ்கர் அதிரடி கேள்வி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–