கிரிக்கெட்

ஜாம்பவான் அந்தஸ்தை கோலி நெருங்கி விட்டார் டோனி சொல்கிறார் + "||" + Legend status Kohli has approached Dhoni says

ஜாம்பவான் அந்தஸ்தை கோலி நெருங்கி விட்டார் டோனி சொல்கிறார்

ஜாம்பவான் அந்தஸ்தை கோலி நெருங்கி விட்டார் டோனி சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அளித்த பேட்டியில், ‘விராட்கோலி மிகச்சிறந்த வீரர்.
மும்பை,

மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட "டோனி" பிறகு அளித்த பேட்டியில், ‘விராட்கோலி மிகச்சிறந்த வீரர்.  அவர் ஏற்கனவே ஒரு அந்தஸ்தை அடைந்து விட்டார். விராட்கோலி ஜாம்பவான் அந்தஸ்தை ஏறக்குறைய நெருங்கி விட்டார். அவரை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  கடந்த சில வருடங்களாக அவர் உலகின் எந்தவொரு இடமாக இருந்தாலும் அருமையாக விளையாடி வருகிறார். அவர் இந்திய அணியை நன்றாக முன்னெடுத்து செல்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரின் போது நடுவரிடம் இருந்து நான் பந்தை வாங்கி சென்றது நமது அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரிடம் காட்டுவதற்காக தான். ஓய்வு பெறுவதற்காக அல்ல. அடுத்த ஆண்டு உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் பந்தின் தன்மையை ஆய்வு செய்து அதற்கு தகுந்தபடி திட்டமிடுவதற்கு தான் பந்தை வாங்கினேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி வெல்லுமா? என்று கேட்கிறீர்கள். டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் வெற்றி பெற முடியும்’ என்று தெரிவித்தார்.