கிரிக்கெட்

கிரிக்கெட்: அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தானே வெல்லும்- முகமது யூசுப் + "||" + Yousuf: Pakistan are favourites for Cricket World Cup 2019

கிரிக்கெட்: அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தானே வெல்லும்- முகமது யூசுப்

கிரிக்கெட்: அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தானே வெல்லும்- முகமது யூசுப்
கிரிக்கெட் அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தானே வெல்லும் என முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறி உள்ளார்.
இஸ்லாமபாத்

இங்கிலாந்தில் அடுத்தாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் விளையாடி உலகக் கோப்பையை கைபற்றுவதற்கான பயிற்சிகளை அனைத்து அணிகளும் தொடங்கிவிட்டன. 

இந்திய அணி கூட இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையை கைபற்றும் தகுதி பாகிஸ்தான் அணிக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பெட்டியில் முகமது யூசுப்  பாகிஸ்தான் ஏன் வெல்லும் என்றால் அதற்கு காரணங்கள் இருக்கிறது. இப்போதுள்ள அணிகளில் பாகிஸ்தானுக்கு மட்டுமே பேட்டிங் பவுலிங் சரிவிகிதத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் மிகப் பெரிய பலம் அதன் பந்துவீச்சாளர்கள். பார்ட் டைம் பந்து வீச்சாளர்கள் இல்லாத அணி. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற மைதானங்கள் இங்கிலாந்தில் இருப்பதால் எதிரணியின் விக்கெட்டை எளிதாக எடுப்பார்கள் பாகிஸ்தான் வீரர்கள் என கூறியுள்ளார். 

பாகி்ஸ்தானுக்கு இ முகமது யூசுப் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்தவர்.

இந்தியாதான் உலகக் கோப்பையை வெல்லும் என கூறப்படுகிறதே என அவரிடம் கேட்டதற்கு, அதற்கு பதில் கொடுத்த முகமுது யூசுப் இந்தியா நம்பர் ஒன் அணியாக இருக்கலாம். உலகின் மிகச் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக இருக்கலாம், ஆனால் இந்திய அணியின் பவுலிங் நம்பிக்கை தரக் கூடிய வகையில் இல்லை. அதனால் கஷ்டம்தான் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டோனி, சுரேஷ் ரெய்னா, ரோகித் அதிக சிக்சர்கள் சாதனை படைக்கப்போவது யார்?
ஐபிஎல் போட்டியில் அதிக சிக்சர்கள் சாதனையை படைக்கப்போவது யார் என்பது தெரியவரும்.
2. முகமது ஷமிக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
முகமது ஷமிக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
3. ஐபிஎல் போட்டி : 25 ஆயிரம் ரசிகர்களுக்கு ரூ. 500 க்கு டிக்கெட் - டேவிட் வார்னர்
12-வது ஐபிஎல் போட்டியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் 25 ஆயிரம் ரசிகர்களுக்கு 500 ரூபாய்க்கு டிக்கெட் வழங்கப்போவதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது. இதை அந்த அணியின் வீரர் டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.
4. தன் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனைத் திறந்து வைக்க டோனி மறுப்பு
தன் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனைத் திறந்து வைக்க டோனி மறுப்பு தெரிவித்து விட்டார்.
5. மைதானத்திற்குள் ரசிகருடன் ஓடி பிடித்து விளையாடிய டோனி
நாக்பூர் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருடன் டோனி ஓடி பிடித்து விளையாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.