கிரிக்கெட்

‘வயதாகி விட்டதாக நினைக்கவில்லை’ - ஆண்டர்சன் + "||" + 'I do not think its old' - Anderson

‘வயதாகி விட்டதாக நினைக்கவில்லை’ - ஆண்டர்சன்

‘வயதாகி விட்டதாக நினைக்கவில்லை’ - ஆண்டர்சன்
வயதாகி விட்டதாக நினைக்கவில்லை என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
லண்டன்,

லண்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவுக்கு எதிராக மட்டும் அவர் இதுவரை 95 விக்கெட்டுகள் (24 டெஸ்ட்) சாய்த்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பாகிஸ்தானின் இம்ரான்கானிடம் (94 விக்கெட்) இருந்து தட்டிப்பறித்தார்.


பின்னர் 36 வயதான ஆண்டர்சன் கூறுகையில், ‘எனக்கு வயதாகி விட்டதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களை போலவே களத்தில் இன்னும் என்னால் முழு அளவில் சாதிக்க முடியும் என்று உணர்கிறேன். இதே உணர்வு இருக்கும் பட்சத்தில் முடிந்த அளவுக்கு நீண்ட காலம் விளையாட முடியும்’ என்றார்.