கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக்கில் கெய்ல், அப்ரிடி பங்கேற்பு + "||" + Afghanistan in the Premier League Gayle, Afridi Participation

ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக்கில் கெய்ல், அப்ரிடி பங்கேற்பு

ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக்கில் கெய்ல், அப்ரிடி பங்கேற்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 5–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 5–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை நடக்கிறது. பக்டியா, காபூல், பால்க், நங்கர்ஹார், காந்தகார் ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டியில் பங்கேற்கும் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), அப்ரிடி (பாகிஸ்தான்), பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து), ஆந்த்ரே ரஸ்செல் (வெஸ்ட் இண்டீஸ்), ரஷித்கான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோருக்கு முத்திரை வீரர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து உள்ளூர் வீரர்களுடன், காலின் முன்ரோ, முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால், ரவி போபரா, பென் கட்டிங், திசரா பெரேரா, முகமது ஹபீஸ், சோகைல் தன்விர், கம்ரன் அக்மல், வஹாப் ரியாஸ், சாம் பில்லிங்ஸ் போன்ற பிரபலமான வீரர்களும் களம் இறங்குகிறார்கள்.