கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்? டோனி விளக்கம்


கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்? டோனி விளக்கம்
x
தினத்தந்தி 13 Sep 2018 10:00 PM GMT (Updated: 13 Sep 2018 9:40 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்று பெயர் பெற்ற டோனி 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ராஞ்சி, 

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்று பெயர் பெற்ற டோனி 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2017–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகினார். புதிய கேப்டனாக விராட்கோலி நியமனம் செய்யப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து ராஞ்சியில் நடந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டோனி விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், ‘2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயாராக்க புதிய கேப்டனுக்கு (விராட்கோலி) போதிய கால அவகாசம் அளிக்க வேண்டியது அவசியம் என்று கருதினேன். எனவே அது தான் விலக சரியான நேரம் என்று முடிவு செய்து கேப்டன் பதவியை துறந்தேன்’ என்று தெரிவித்தார்.


Next Story