கிரிக்கெட்

நெற்றியில் குங்குமம் - சுடிதார் துப்பட்டா அணிந்து பெண் வேடத்தில் கிரிக்கெட் வீரர் கம்பீர் + "||" + For a Cause! Gambhir Wears Saree, Bindi While Supporting Transgenders

நெற்றியில் குங்குமம் - சுடிதார் துப்பட்டா அணிந்து பெண் வேடத்தில் கிரிக்கெட் வீரர் கம்பீர்

நெற்றியில் குங்குமம் - சுடிதார் துப்பட்டா அணிந்து பெண் வேடத்தில்  கிரிக்கெட் வீரர் கம்பீர்
சுடிதார் துப்பட்டா அணிந்து குங்குமம் வைத்து இருக்கும் கிரிக்கெட் வீரர் கம்பீரின் புகைப்படம் வைரலாகி உள்ளது.
புதுடெல்லி,

இந்திய அணியில் சில மாதங்கள் முன்பு வரை ஓப்பனர் மற்றும் ஒன் டவுன் இடத்தில் ஆடி வந்தார் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். இப்போது இவருக்கு அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.

இவர் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இவரது வித்தியாசமான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இது டெல்லியில் நடந்த ஹிஜ்ரா ஹப்பா விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

தமிழகத்தில் கூவாகத்தில் திருநங்கைகள், திருநம்பிகளுக்காக விழா நடப்பது வழக்கும். எல்லா வருடமும் இந்த விழா மிகவும் சிறப்பாக நடக்கும். அதேபோல்தான் டெல்லியில் ஹிஜ்ரா ஹப்பா விழாவிலும் திருநங்கைகள், திருநம்பிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த விழா வட இந்தியாவில் மிகவும் பிரபலம்.

இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கவுதம் கம்பீர் அழைக்கப்பட்டு இருந்தார். திருநங்கைகள், திருநம்பிகள் அழைப்பை ஏற்று அவர் நேற்று இந்த விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் துப்பட்டா அணிந்து, சுடிதார் போட்டு, பின் நெற்றியில் குங்குமமும் வைத்து காட்சி அளித்தார். அந்த விழாவில் திருநங்கைகள், திருநம்பிகளின் வாழ்க்கை குறித்து பேசினார்.

அவரது இந்த தோற்றம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. எல்லோரும் இவரை பாராட்டி வருகிறார்கள். இவர் மிகவும் சிறந்த மனிதர், நல்லவர் என்று பாராட்டி வருகிறார்கள்.