கிரிக்கெட்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு இரண்டு துணை கேப்டன்கள் நியமனம் + "||" + For Australia Test Team Two deputy captains are nominated

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு இரண்டு துணை கேப்டன்கள் நியமனம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு இரண்டு துணை கேப்டன்கள் நியமனம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

சிட்னி, 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் தலைமையில் களம் இறங்குகிறது.

இந்த நிலையில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் முதல்முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு இரண்டு துணை கேப்டன்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்வாளர்கள், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆல்–ரவுண்டர் மிட்செல் மார்ஷ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை துணை கேப்டன்களாக நியமித்து இருக்கிறார்கள். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்ட போது, அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டு, கடைசியில் டிம் பெய்ன் கேப்டனாக்கப்பட்டார்.

இது போன்ற சூழலை தவிர்க்கவும், கேப்டன்ஷிப்பில் அனுபவம் வாய்ந்த வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதாலேயே தற்போது இரண்டு பேருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...