21 வயதில் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கிரிக்கெட் வீரர்


21 வயதில்  திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கிரிக்கெட் வீரர்
x
தினத்தந்தி 2 Oct 2018 9:55 AM GMT (Updated: 2 Oct 2018 9:55 AM GMT)

ஆசிய கோப்பை போட்டியில் விளையாடி 21 வயது கிரிக்கெட் வீரர் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.


கிறிஸ் கார்டர் இதுவரை 11 ஒருநாள், 10- இருபது ஓவர் 20 போட்டிகளில் ஹாங்காங் அணிக்காக விளையாடியுள்ளார். 21 வயதான இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் ஹாங்காங் அணி விளையாடிய இரு ஆட்டங்களிலும் இடம்பெற்றார். ஹாங்காங் கிரிக்கெட் சங்கத்தில் இவருக்கு ஒப்பந்தம் இருந்தாலும் கிரிக்கெட்டில் குறைவான வாய்ப்புகளே உள்ளதால் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விமானம் ஓட்டுவதில் கனவு கொண்டுள்ள கார்டர், விமானப் பயிற்சிப் பள்ளியில் இணைந்துள்ளார். இதற்காக, தான் வசித்த ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்பவுள்ளார். அடிலெய்ட் சென்று பயிற்சிப் பள்ளியில் இணைந்து பிறகு கேத்தே பெசிஃபிக் விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றவுள்ளார். 

ஹாங்காங்கில் பிறந்த கார்டர், 2015-ல் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அரசாங்கமே ஐசிசியோ நிதியுதவி தருவதில்லை. ஏற்கெனவே என் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுத்தான் கிரிக்கெட்டில் ஈடுபட்டேன். இப்போது என் கனவை நோக்கி பயணிக்கவுள்ளேன் என்று தன் முடிவு குறித்து அவர் கூறியுள்ளார். 21 வயதில் ஒரு சர்வதேச வீரர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

Next Story