கிரிக்கெட்

‘வீரர்கள் நினைப்பதை அறிந்து ஆலோசனை அளிக்கக்கூடியவர், டோனி’ யுஸ்வேந்திர சாஹல் புகழாரம் + "||" + Knowing the players think Counseling Dhoni, Yuzvendra Chahal praises,

‘வீரர்கள் நினைப்பதை அறிந்து ஆலோசனை அளிக்கக்கூடியவர், டோனி’ யுஸ்வேந்திர சாஹல் புகழாரம்

‘வீரர்கள் நினைப்பதை அறிந்து ஆலோசனை அளிக்கக்கூடியவர், டோனி’ யுஸ்வேந்திர சாஹல் புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அளித்த ஒரு பேட்டியில், ‘எப்போதும் அணியில் சீனியர் வீரர்கள் இருப்பது சிறந்த அனுபவத்தை அளிக்கும். டோனியின் வழிகாட்டுதலில் இளம் வீரர்கள் பலர் தங்கள் திறமையை மேம்படுத்தி இருக்கிறார்கள்.
புதுடெல்லி,

போட்டியின் போது எனக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ? அல்லது சந்தேகம் ஏற்படுகிறதோ? அப்போதெல்லாம் நான் டோனியை பார்ப்பேன். அவர் எனக்கு சிறந்த யோசனையை வழங்குவார். டோனிக்கு பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறியும் திறன் அதிகம் உண்டு. நம்முடைய செயலை வைத்தே என்ன தேவை என்பதை அறிந்து கொண்டு நமக்கு ஆலோசனை வழங்குவார்.

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டத்தின் போது பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா, டோனியிடம் ஆலோசனை நடத்தி விட்டு என்னை ‘பவர்பிளே’யில் பந்து வீசும் படி கூறினார். இருப்பினும் நான் டோனியை ஒருமுறை பார்த்தேன். அவர் என்னிடம் ஓடி வந்து ஸ்டம்பை குறி வைத்து பந்து வீசு என்றார். நானும் அப்படியே செய்தேன். எனக்கு இமாம் உல்-ஹக் விக்கெட் கிடைத்தது. இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் எனக்கு பலமுறை வழிகாட்டி இருக்கிறார். அவரது ஆலோசனையின்படி நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். சில சமயங்களில் நாங்கள் செய்யும் தவறை ஸ்டம்புக்கு பின்னால் இருந்து கவனிக்கும் டோனி திட்டுவார். விராட்கோலி சிறந்த கேப்டன் தான்.

இருப்பினும் அவருக்கு சந்தேகம் ஏற்படும் போது டோனியிடம் தான் ஆலோசனை கேட்பார். டோனி தெரிவிக்கும் ஆலோசனை அணிக்கு பலன் அளிப்பதாக இருக்கும். டோனி அணியில் இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம். டோனி, விராட்கோலி, ரோகித் சர்மா ஆகிய மூவரும் அணியை வழிநடத்தும் விதம் வித்தியாசமானவையாகும். அவர்களது கேப்டன்ஷிப் பாணியை ஒப்பிடக்கூடாது’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் இருந்து டோனி விலகல்: இந்திய அணி இன்று தேர்வு
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அந்த தொடரில் இருந்து டோனி விலகியுள்ளார்.
2. 7-வதாக இறக்கப்பட்ட டோனி! இறுதிப்போட்டி வாய்ப்பு பறிபோக யார் காரணம்...
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
3. டோனி எப்போது ஓய்வு? விராட் கோலி வெளியிட்ட முக்கிய தகவல்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி ஓய்வு குறித்து தங்களிடம் ஏதும் கூறவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
4. ரவி சாஸ்திரியிடம் அறிவுரை கேட்ட டோனி
சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது குறித்து ரவி சாஸ்திரியிடம் எம்.எஸ்.தோனி நீண்டநேரம் ஆலோசனை கேட்டுள்ளார்.
5. ஓய்வு பெறுவது எப்போது? வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த டோனியின் பதில்
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி தன்னுடைய ஓய்வுகுறித்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்து உள்ளார்.