கிரிக்கெட்

ஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் + "||" + Ashwin gets Powell to end bright opening stand

ஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

ஐதராபாத் 2-வது  டெஸ்ட் போட்டி  வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது
ஐதராபாத்

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

போதிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி 5 நாட்கள் வரை தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயமாக இருக்கும். கணுக்கால் காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத கேப்டன் ஜாசன் ஹோல்டர் உடல்தகுதியை எட்டி விட்டதாக தெரிகிறது. இதே போல் தனது பாட்டி இறந்ததால் தாயகம் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் இந்தியாவுக்கு வந்து விட்டார். இந்த போட்டியில் ரோச் களம் காண இருப்பது வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை பலப்படுத்தும். முந்தைய டெஸ்டில் அடைந்த மோசமான தோல்விக்கு பரிகாரம் தேடுவதற்கு முடிந்தவரை முயற்சிப்பார்கள் என்று நம்பலாம்.