கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு உதவாது -காம்பீர் + "||" + Playing Australia in Australia will be a threat feels Gautam Gambhir

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு உதவாது -காம்பீர்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு உதவாது  -காம்பீர்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தயாராவதற்கு எந்த வகையிலும் உதவாது என கவுதம் காம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர்  போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது.

ஒருநாள் தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3  இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான முன்னோட்டமாக நினைத்து இந்திய அணி ஆடிவருகிறது. வீரர்கள் தேர்வும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மனதில்கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய மண்ணில் தற்போதைய பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடுவது, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு எந்தவிதத்திலும் உதவாது என்று காம்பீர் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸை 2-0 என வீழ்த்தி இந்திய அணி தொடரை வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் இந்த தொடரை வென்றாலும், அதை நினைத்து இந்திய அணி மார்தட்டக்கூடாது என்பதே காம்பீரின் கருத்து.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  காம்பீர், வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு எந்தவிதத்திலும் உதவாது. இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்வது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிரயோஜனமே கிடையாது. அதனால் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் 20 முதல் 25 நாட்கள் முன்னதாகவே ஆஸ்திரேலியாவிற்கு சென்று அங்கு முடிந்தளவிற்கு அதிகமான பயிற்சி போட்டிகளில் ஆட வேண்டும். அதுதான் இந்திய அணிக்கு உதவியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இதை செய்யாததால்தான் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களை நாம் இழந்தோம். எனவே கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்று அதை திருத்திக்கொள்ள வேண்டும். எனவே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சோபிக்கும் விதமாக இதை செய்வார்கள் என்று நம்புவதாக காம்பீர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விராட் கோலி - ரோகித் சர்மா மோதலுக்கு யார் காரணம்? -சுனில் கவாஸ்கர்
இந்திய கேப்டன் கோலி- துணைத்தலைவர் ரோகித் மோதலுக்கு காரணமானவர்கள் குறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
2. காஷ்மீர் பிரச்சினை: அமெரிக்கா தலையிட வலியுறுத்திய அப்ரிடி பதிலடி கொடுத்த கவுதம் காம்பீர்
காஷ்மீர் பிரச்சினையில் கருத்து தெரிவித்த அப்ரிடிக்கு பாஜக எம்.பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர் பதில் அளித்து உள்ளார்.
3. அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான்! கோலியை மீண்டும் சீண்டும் கவுதம் கம்பீர்
அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான்! கோலியை மீண்டும் சீண்டி உள்ளார் கவுதம் கம்பீர்