பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்


பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்
x
தினத்தந்தி 13 Oct 2018 9:30 PM GMT (Updated: 13 Oct 2018 9:04 PM GMT)

நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ்–கேன்டர்பரி அணிகள் மோதின.

நெல்சன், 

நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ்–கேன்டர்பரி அணிகள் மோதின. இது 4 நாட்கள் கொண்ட போட்டியாகும். முதலில் பேட் செய்த சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ் அணி முதல் நாளில் 7 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்தது. 2–வது மற்றும் 3–வது நாள் ஆட்டத்தில் மழையால் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. கடைசி நாளில் மழை பாதிப்பு இல்லை. கடைசி நாளில் சிறிது நேரம் ஆடிய டிஸ்ட்ரிக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 352 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்தது. இந்த போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்துவதற்காக கேன்டர்பரி அணி களம் இறங்காமலேயே முதல் இன்னிங்சை ’டிக்ளேர்’ (0–0) செய்வதாக அறிவித்தது. இதே பாணியை கடைபிடித்த டிஸ்ட்ரிக்ஸ் அணி 2–வது இன்னிங்சை ரன் கணக்கை தொடங்காமலேயே ‘டிக்ளேர்’ செய்வதாக கூறியது. ஆக, கேன்டர்பரி அணிக்கு 353 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய கேன்டர்பரி அணி தோல்வியை தவிர்க்க போராடியது. ஒரு ஓவர் மிஞ்சியிருந்த போது அந்த அணி 88 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதனால் டிஸ்ட்ரிக்ஸ் அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.


Next Story