கிரிக்கெட்

ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது + "||" + India vs West Indies Umesh Yadav shines as India rout West Indies, win series 2-0

ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது

ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் கவனமாக விளையாடியது. சீரான விளையாட்டை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினர். 

101.4 ஓவர்கள் தாக்கு பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணியும் அபாரம் காட்டியது. இந்தியா 367 ரன்களை சேர்த்தது. 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ் (4), ஜடேஜா (3) ஆகியோரின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 127 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவை விட 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் இந்தியாவிற்கு 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ். 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அடைந்த லோகேஷ் ராகுல் பொறுப்புடன் விளையாடினார். இருவரும் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தனர். 17-வது ஓவரின் முதல் பந்தை பிரித்வி ஷா பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 75 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா தலா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டையாடப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் உஷார்
இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.
3. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு
இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
5. இந்தியாவிலும் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு
இந்தியாவில் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டமிட்டுள்ளதாக அணுசக்தி துறை தலைவர் கூறியுள்ளார்.