6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்


6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்
x
தினத்தந்தி 15 Oct 2018 7:56 AM GMT (Updated: 15 Oct 2018 7:56 AM GMT)

ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.

சார்ஜா:

ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

சார்ஜாவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார். காபுல் ஸ்வானை அணி வீரரான அவர் பல்கி லெஜன்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

ஆட்டத்தின் 4-வது ஓவரை அப்துல்லா மஜாரி வீசினார். இந்த ஓவரில் தான் ஹஸ்ரசத்துல்லா 6 பந்துகளிலும் 6 சிக்சர் விளாசினார். அவர் 17 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். 12 பந்துகளில் அரை சதத்தை தொட்டார்.

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 6-வது வீரர் என்ற பெருமையை ஹஸ்ரத்துல்லா பெற்றார். இதற்கு முன்பு கேரி சோபர்ஸ் (வெஸ்ட்இண்டீஸ்), ரவிசாஸ்திரி (இந்தியா), கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா), யுவராஜ்சிங் (இந்தியா), ஜோர்டன் கிளார்க் (இங்கிலாந்து) ஆகியோர் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து இருந்தனர்.

அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முன்பு ஹஸ்ரசத்துல்லா இந்த அதிரடியை நிகழ்த்தினார். அவரது அதிரடியான ஆட்டத்தை கெய்ல் பாராட்டினார்.

ஹஸ்ரசத்துல்லா விளையாடிய அவரது அணி வெற்றி பெற முடியாமல் அந்த அணி 21 ரன்னில் தோற்றது. பல்கி லெஜன்டஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன் எடுத்தது. கெய்ல் 48 பந்தில் 80 ரன் எடுத்தார். காபூல் ஸ்வானை அணியில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்னே எடுக்க முடிந்தது.



Next Story