கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை 89 ரன்னில் சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி + "||" + Australia got 89 runs Pakistan's victory

ஆஸ்திரேலியாவை 89 ரன்னில் சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி

ஆஸ்திரேலியாவை 89 ரன்னில் சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
அபுதாபி,

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 68 ரன்கள் (55 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவர்களில் 89 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் 3-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். கேப்டன் ஆரோன் பிஞ்ச் (0), டார்சி ஷார்ட் (4 ரன்), மேக்ஸ்வெல் (2 ரன்) உள்பட 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். பாகிஸ்தான் தரப்பில் இமாத் வாசிம் 3 விக்கெட்டும், பஹீம் அஷ்ரப், ஷகீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 2-வது 20 ஓவர் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.