கிரிக்கெட்

20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் ; டெஸ்ட் அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு + "||" + From over 20 tournaments Tony stops the action Vijay is back in Test team

20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் ; டெஸ்ட் அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு

20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் ; டெஸ்ட் அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

புனே, 

முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 4–ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த ஆறு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதிரடி மாற்றமாக ரன் குவிக்க தடுமாறி வரும் இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான 37 வயதான டோனி அணியில் இடம் பெறவில்லை. அணியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு டோனி நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு மட்டும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் தமிழக ஆல்–ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), குணால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், ‌ஷபாஸ் நதீம்.

ஆஸ்திரேலிய 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பான்ட (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

இதே போல் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணியுடன் 4 டெஸ்டுகளில் விளையாடும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டெஸ்ட் அணிக்கு முரளிவிஜய் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ஷிகர் தவான் கழற்றி விடப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா இன்னும் காயத்தில் இருந்து குணமடையாததால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. 

இந்திய டெஸ்ட் அணி வருமாறு:– விராட் கோலி (கேப்டன்), முரளிவிஜய், லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா, ரிஷாப்பான்ட், பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, இஷாந்த் ‌ஷர்மா, உமேஷ் யாதவ், பும்ரா, புவனேஷ்வர்குமார்.