கிரிக்கெட்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் டோனியின் வாழ்க்கை முடிகிறது ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து ஆட திட்டம் + "||" + International 20 Over cricket Toni's life ends

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் டோனியின் வாழ்க்கை முடிகிறது ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து ஆட திட்டம்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் டோனியின் வாழ்க்கை முடிகிறது ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து ஆட திட்டம்
அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதன் மூலம் சர்வதேச 20 கிரிக்கெட்டில் டோனியின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது.

புனே, 

அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதன் மூலம் சர்வதேச 20 கிரிக்கெட்டில் டோனியின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது.

டோனிக்கு இடமில்லை

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி இடம் பெறவில்லை. விக்கெட் கீப்பிங்கில் அசத்தும் டோனியால், ரன் குவிப்பில் முன்பு மாதிரி ஜொலிக்க முடியவில்லை. இதனால் தான் அவரை கழற்றி விட வேண்டிய சூழல் உருவாகி விட்டது. அவருக்கு பதிலாக 21 வயது விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் 37 வயதான டோனியின் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் சொல்கிறார்கள். 2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றுத் தந்து வரலாறு படைத்த டோனி இதுவரை 93 இருவது ஓவர் ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உள்பட 1,487 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 54 கேட்ச், 33 ஸ்டம்பிங் செய்திருக்கிறார்.

தெண்டுல்கரின் பாணியில்...

அடுத்த ஆண்டு (2019) மே இறுதியில் தொடங்கும் ஒரு நாள் போட்டி உலக கோப்பை வரை ஆட வேண்டும் என்பது தான் டோனியின் திட்டமாகும். ஆனால் அவர் போதிய பார்ம் இல்லாததால் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று ஒரு சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். சச்சின் தெண்டுல்கருக்கு இந்த மாதிரி நெருக்கடி ஏற்பட்ட போது ஒரு நாள் போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொண்டு, சில காலம் டெஸ்டில் மட்டும் நீடித்தார். அவரது பாணியில் டோனி, 20 ஓவர் போட்டியை மறந்து விட்டு, ஒரு நாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. டோனி ஏற்கனவே 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறும் போது, ‘20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது 20 ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்து விட்டதாக சொல்ல முடியாது. 2–வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு சில வீரர்களை பழக்கப்படுத்த விரும்புகிறோம்’ என்றார்.

நீக்கம் ஏன்?

இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அடுத்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 2020–ம் ஆண்டு நடக்கிறது. அதுவரை அவர் விளையாடப்போவதில்லை. அப்படி இருக்கும் போது அவர் தொடர்ந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஏன் விளையாட வேண்டும். இந்த விவகாரத்தை தேர்வு குழுவினரும், அணி நிர்வாகமும் சரியாக ஆலோசித்து முடிவு எடுத்து இருக்கிறார்கள். அணியின் தேர்வு குழு கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர். அதனால் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் தேர்வு குழுவினர் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணிதினேஷ் கார்த்திக
2. இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.
3. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு தேர்வு
இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் விராட்கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
டெல்லி, மும்பை இரு அணிகளும் ஒரே மாதிரியாக தலா 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.
5. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சர்வான் நியமனம்
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் நடைபெறும் 3 நாடுகள் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.