வெஸ்ட் இண்டீஸ் உடனான 4 வது ஒருநாள் போட்டி: 378 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி


வெஸ்ட் இண்டீஸ் உடனான 4 வது ஒருநாள் போட்டி:  378 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
x
தினத்தந்தி 29 Oct 2018 1:31 PM GMT (Updated: 29 Oct 2018 1:31 PM GMT)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 4வது ஒருநாள் போட்டியில் 378 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என ஒருநாள் தொடரில் சமநிலையில் இருக்கின்றன. முதல் போட்டியை இந்தியா வென்றது. இரண்டாம் போட்டி டிரா ஆனது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்று இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் 4 வது  போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான சூழலில் இந்தியா இருக்கிறது.

4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரோஹித், தவான் துவக்கம் அளித்தனர். அதிரடியாக 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்த தவான் 40 பந்துகளில் 38 ரன்கள் அடித்து கீமோ பால் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த கோலி 16 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். ஏற்கனவே மூன்று போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்து இருந்த கோலி, இன்று தொடர்ந்து நான்காவது சதத்தை அடித்து இருந்தால், புதிய சாதனை படைத்திருப்பார். அந்த வாய்ப்பை நழுவ விட்டார் அவர்.  ரோஹித் சர்மா பொறுப்புடன் விளையாடி தனது 21வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்த அவர் 162 ரன்களில் ஆட்டமிழக்க, அம்பத்தி ராயுடு சதம் விளாசி ரன் அவுட் ஆனார். தோனி 23 ரன்களில் வெளியேற 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. 

Next Story