கிரிக்கெட்

விமர்சித்த ரசிகரை இந்தியாவை விட்டு வெளியேறும்படி கோலி கூறியதால் சர்ச்சை + "||" + Criticized fan To leave India Kohli said controversy

விமர்சித்த ரசிகரை இந்தியாவை விட்டு வெளியேறும்படி கோலி கூறியதால் சர்ச்சை

விமர்சித்த ரசிகரை இந்தியாவை விட்டு வெளியேறும்படி கோலி கூறியதால் சர்ச்சை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதே போல் ஒரு நாள் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றார். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் கோலி வியக்கத்தக்க வகையில் விளையாடி வருவதாக முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோலியை விமர்சித்து அவரது டுவிட்டரில் ரசிகர் ஒருவர் வித்தியாசமான கருத்தை பதிவிட்டு இருந்தார். அதில், ‘விராட் கோலியை ரொம்பவே தூக்கி வைத்து பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை விராட் கோலியிடம் சிறப்பு வாய்ந்த பேட்டிங் திறமை இருப்பதாக தெரியவில்லை. இந்திய வீரர்களை காட்டிலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் பேட்டிங்கையே நான் மிகவும் ரசித்து பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கருத்து ஏனோ விராட் கோலிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக தனது பெயரில் புதியதாக உருவாக்கப்பட்ட செயலியில் வீடியோ பதிவை கோலி வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பதிவில், ‘இந்த கருத்தை கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது வாழலாம். மற்ற நாடுகளை நேசித்துக் கொண்டு ஏன் அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும். நீங்கள் என்னை பிடிக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இந்தியாவில் இருக்க வேண்டுமா? இவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.’ என்று கோலி காட்டமாக கூறியிருக்கிறார்.

கோலியின் வீடியோ, சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிறைய ரசிகர்கள் அவருக்கு சூடான பதிலடி கொடுத்துள்ளனர். அதில், ‘இந்தியரான நீங்கள் ஏன் வெளிநாட்டில் (இத்தாலி) போய் திருமணம் செய்தீர்கள்? வெளிநாட்டினர் கண்டு பிடித்த விளையாட்டை ஏன் விளையாடுகிறீர்கள்? மற்ற விளையாட்டுகளில் வெளிநாட்டு அணியை ஏன் ஆதரிக்கிறீர்கள்? பலகட்டத்தில் அயல்நாட்டு மொழியை பேசுகிறீர்கள். வெளிநாட்டு உடையை அணிகிறீர்கள். அரசியல்வாதியை போல் பேசுவது நல்லதல்ல.’ என்று வறுத்தெடுத்துள்ளனர்.

இன்னொரு ரசிகர், ‘கடந்த 2008–ம் ஆண்டு உங்களுக்கு பிடித்த வீரர் கிப்ஸ்(தென்ஆப்பிரிக்கா) சென்று சொன்னீர்கள். அப்படியென்றால் விராட் கோலியை தென்ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி விடலாமா? ’ என்று கூறியுள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...