கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணியில் இருந்து அஸ்வின், விஜய் விடுவிப்பு + "||" + Ranji Cricket: From Tamilnadu Asin, Vijay is released

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணியில் இருந்து அஸ்வின், விஜய் விடுவிப்பு

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணியில் இருந்து அஸ்வின், விஜய் விடுவிப்பு
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு–ஐதராபாத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நெல்லையில் வருகிற 12–ந்தேதி முதல் 15–ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை,

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு–ஐதராபாத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நெல்லையில் வருகிற 12–ந்தேதி முதல் 15–ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறவில்லை. இதே போல் முரளிவிஜய், விஜய் சங்கர் ஆகியோர் இந்திய ‘ஏ’ அணிக்காக ஆடுவதற்காக நியூசிலாந்துக்கு செல்வதால் அவர்களும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக கே.விக்னேஷ், சி.வி.வருண், ஷாருக்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...