கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் முனாப் பட்டேல் ஓய்வு + "||" + Indian cricketer Munaf Patel retired

இந்திய கிரிக்கெட் வீரர் முனாப் பட்டேல் ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீரர் முனாப் பட்டேல் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் எல்லா வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் எல்லா வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். குஜராத்தை சேர்ந்த 35 வயதான முனாப் பட்டேல் 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் மொகாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அவர் இடம் பிடித்து இருந்தார். 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 35 விக்கெட்டும், 70 ஒருநாள் போட்டியில் விளையாடி 86 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடி 4 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். முனாப் பட்டேல் கூறுகையில் ‘என்னுடன் விளையாடிய வீரர்களில் டோனி தவிர மற்ற அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். எனவே ஓய்வு பெறுவதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. எனக்கு கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் தெரியாது. கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற விரும்புகிறேன்’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...