கிரிக்கெட்

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வீராட் கோலி தொடர்ந்து முதலிடம் + "||" + ICC ODI Rankings: Virat Kohli remains on top but Ross Taylor pips Joe Root, Babar Azam, climbs to No. 3

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வீராட் கோலி தொடர்ந்து முதலிடம்

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வீராட் கோலி தொடர்ந்து முதலிடம்
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் வீராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.
துபாய்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 899 புள்ளிகளுடன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். துணை கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார். 3-வது இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்த ரோஸ் டெய்லரும், இங்கிலாந்தின் ஜோய் ரோட் 4-வது இடத்திலும் பாகிஸ்தானின் பாபர் அசாம் 5-வது இடத்திலும் உள்ளனர். 

ஒன்பதாவது இடத்தில் இருந்த ஷிகார் தவான், எட்டாவது இடத்துக்கு முன்னேறினார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி 20-வது இடத்தில் உள்ளார். 

பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் முதல் பத்து இடத்திற்குள் 3 இந்திய வீரர்கள் உள்ளனர். 

ஜஸ்பிரீத் பூம்ரா 841 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளார். இரண்டாம் இடத்தில் இருந்த யுஸ்வேந்திர சாஹல் மூன்று இடங்கள் பின் தங்கி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

353 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தற்போது உலக கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டரில் முதலிடம் வகிக்கிறார்.

அணிகள் தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகளுடன்  இரண்டாவது இடத்தில் உள்ளது. 126 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.