கிரிக்கெட்

8-வது முறையாக டாஸ் வென்ற ரூட் ; நாணயத்தை சோதனை செய்யுங்கள் - அஸ்வின் கிண்டல் + "||" + R Ashwin shuts trolls that tried to roast him over his Australia records

8-வது முறையாக டாஸ் வென்ற ரூட் ; நாணயத்தை சோதனை செய்யுங்கள் - அஸ்வின் கிண்டல்

8-வது முறையாக டாஸ் வென்ற ரூட் ; நாணயத்தை சோதனை செய்யுங்கள் - அஸ்வின் கிண்டல்
8-வது முறையாக டாஸ் வென்ற ரூட் நாணயத்தை சோதனை செய்யுமாறு கிண்டல் செய்த அஸ்வின்.
கொழும்பில் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

ரூட், தொடர்ச்சியாக வெல்லும் எட்டாவது டாஸ் இது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் ஆட்டங்களிலும் டாஸ் வென்றார் ரூட்.  தற்போது இலங்கைக்கு எதிரான 3 டெஸ்டுகளிலும் டாஸ் வென்றுள்ளார் ரூட். 

1960-61-ல் இங்கிலாந்தின் கோலின் கவுட்ரே தொடர்ச்சியாக 9 டெஸ்ட் ஆட்டங்களில் டாஸ்களை வென்று முதலிடத்தில் உள்ளார். ரூட் போல இதர நான்கு கேப்டன்களும் தொடர்ச்சியாக 8 முறை டாஸ்களை வென்றுள்ளார்கள்.

இதைக் கிண்டல் அடித்து இந்திய வீரர் அஸ்வின் டுவீட் செய்துள்ளதாவது:-

ரூட் 8-வது முறையாக டாஸ் வென்றுள்ளார். இங்கிலாந்து அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. எனினும் தொடர்ச்சியாக டாஸ் இங்கிலாந்து அணி வெல்வது அபாரமாக உள்ளது. அன்பான ஆட்ட நடுவர்களே, டாஸுக்குப் பயன்படுத்தும் நாணயத்தைச் சோதனை செய்யவும் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நேர்காணல் தொடங்கியது - யார் என்பது இன்று மாலை அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் தொடங்கியது. இறுதி பட்டியலில் உள்ள 6 பேரிடம் நேர்காணல் நடைபெறுகிறது.
2. அம்ராபாலி கட்டுமான நிறுவன மோசடி: டோனி - ஷாக்‌ஷி டோனிக்கு சிக்கல் ஏற்படுமா?
அம்ராபாலி கட்டுமான நிறுவன மோசடியில் டோனி மனைவி ஷாக்‌ஷி டோனி விசாரணைக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.