கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு–ஆந்திரா ஆட்டம் ‘டிரா’ + "||" + Ranji Cricket Tamil Nadu-Andhra Pradesh match 'Draw'

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு–ஆந்திரா ஆட்டம் ‘டிரா’

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு–ஆந்திரா ஆட்டம் ‘டிரா’
ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு–ஆந்திரா (‘பி’ பிரிவு) அணிகள் இடையேயான லீக் ஆட்டம் ஓங்கோலில் நடந்தது.

ஓங்கோல், 

ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு–ஆந்திரா (‘பி’ பிரிவு) அணிகள் இடையேயான லீக் ஆட்டம் ஓங்கோலில் நடந்தது. இதில் ஆந்திரா முதல் இன்னிங்சில் 216 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2–வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து இருந்தது. 3–வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. நேற்று 4–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 112.4 ஓவரில் 254 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 57 ரன்கள் எடுத்தார். பின்னர் 38 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய ஆந்திர அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்து இருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. ஆந்திரா ஒரு புள்ளி பெற்றது. நாக்பூரில் நடந்த நடப்பு சாம்பியன் விதர்பா–பரோடா (ஏ பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டமும் டிராவில் முடிந்தது.