கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அறிமுக பவுலர் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை + "||" + Bangladesh Introducing bowler 5 wicket defeat record

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அறிமுக பவுலர் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அறிமுக பவுலர் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை
வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது.

சிட்டகாங், 

வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்திருந்தது. 2–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் எஞ்சிய இரு விக்கெட்டையும் 9 ரன்களில் இழந்து முதல் இன்னிங்சில் 324 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 64 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஹெட்மயர் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 63 ரன்களும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்களும் விளாசினர். அறிமுக சுழற்பந்து வீச்சாளர் நயீம் ஹசன் 5 விக்கெட்டுகளும், ‌ஷகிப் அல்–ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். அறிமுக டெஸ்டிலேயே ஒரு இன்னிங்சில் குறைந்த வயதில் 5 விக்கெட்டுகளை சாய்த்த பவுலர் என்ற சாதனையை 17 வயதான நயீம் ஹசன் படைத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் அறிமுக போட்டியில் தனது 18 வயதில் 5 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை நயீம் ஹசன் முறியடித்துள்ளார்.

அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 55 ரன்களுடன் திணறிக்கொண்டிருந்தது. அந்த அணி இதுவரை 133 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

இதற்கிடையே முதலாவது இன்னிங்சின் போது வங்காளதேச பேட்ஸ்மேன் இம்ருல் கேயசுடன் தோள்பட்டையோடு வேண்டுமென்றே இடித்த வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ‌ஷனோன் கேப்ரியலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்து, ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி பட்டம் வென்று சாதனை
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்தது.
2. ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் வில்லியம்சன் சாதனை
உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தார்.
3. விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக வென்று ஹாலெப் சாதனை செரீனாவை வீழ்த்தி அசத்தல்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் நேர் செட்டில் செரீனா வில்லியம்சுக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை தட்டிச்சென்றார்.
4. விம்பிள்டன் டென்னிசில் 100–வது வெற்றியை பெற்று பெடரர் சாதனை
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.
5. டென்னிஸ் தரவரிசையில் சாதனை: ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார், ஆஷ்லி பார்டி
பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது.