கிரிக்கெட்

டோனி போல ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய ரஷீத் கான் ! + "||" + T10 League: Virender Sehwag Applauds Rashid Khan's Helicopter Shot

டோனி போல ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய ரஷீத் கான் !

டோனி போல ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய ரஷீத் கான் !
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டோனியின் தனித்துவமான ஷாட்களில் ஒன்றான ஹெலிகாப்டர் ஷாட் போலவே, ரஷித் கான் பந்தை சிக்சருக்கு விளாசியது ரசிகர்களை கவர்ந்தது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வீரரான  ரஷித்கான் ஷார்ஜாவில் டி10 போட்டிகளில் ஆடிவருகிறார்.  இந்த போட்டியில் மராத்தா அரபியன்ஸ் அணிக்காக ஆடிய ரஷித் கான், ஆட்டத்தின் 10வது ஓவரின் முதல் பந்தில் அபாரமான சிக்ஸர் ஒன்றை விளாசினார். 

இந்திய வீரர் டோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அப்படியே பிரதி எடுத்தது போல ரஷித் கான் ஷாட் அமைந்தது. ரஷித் கான் அடித்த இந்த ஷாட்டை இந்திய அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் உள்ளிட்ட வீரர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர். மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் ரஷித் கானின் இந்த ஷாட்டை  பார்த்து மெய்சிலிர்த்து போகினர்.  

மராத்தா அரேபியன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சேவாக் விளையாடி வருகிறார். இந்தப்போட்டியில், முதலில் பேட் செய்த மராத்தா அரேபியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 10 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்த இலக்கை துரத்திய பக்டூன்ஸ் அணி 4 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது. 


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘எப்படி இருக்கீங்க; நல்லா இருக்கேன்” - இணையத்தில் வைரலாகும் தோனி மகள் பேச்சு
‘‘எப்படி இருக்கீங்க; நல்லா இருக்கேன்” என தோனி மகள் தமிழில் பேசும் பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.
2. 3-வது ஒருநாள் போட்டி: 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
3. மைதானத்திற்குள் ரசிகருடன் ஓடி பிடித்து விளையாடிய டோனி
நாக்பூர் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருடன் டோனி ஓடி பிடித்து விளையாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
4. நியூசிலாந்து விக்கெட் கீப்பரை ஏமாற்றிய டோனி -வைரலாகும் வீடியோ
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, விக்கெட் கீப்பரை ஏமாற்றுவது போன்று டோனி விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
5. தோனியை வீழ்த்திடாத வரை போட்டியில் வெற்றி பெற முடியாது; நியூசிலாந்து ஆல் ரவுண்டர் நீஷம் புகழாரம்
தோனியை வீழ்த்திடாத வரை நீங்கள் போட்டியில் வெற்றி பெற முடியாது என நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் நீஷம் கூறியுள்ளார்.