கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக வீரர்களின் போராட்டம் வீண்: பெங்கால் அணி ‘திரில்’ வெற்றி + "||" + Ranji Cricket the struggle of the Tamil Nadu players: The Bengal team won the 'thrill'

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக வீரர்களின் போராட்டம் வீண்: பெங்கால் அணி ‘திரில்’ வெற்றி

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக வீரர்களின் போராட்டம் வீண்: பெங்கால் அணி ‘திரில்’ வெற்றி
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக வீரர்களின் போராட்டம் வீணானது. பெங்கால் அணி ‘திரில்’ வெற்றிபெற்றது
சென்னை,

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் இடையிலான லீக் (பி பிரிவு) ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் தமிழகம் 263 ரன்களும், பெங்கால் 189 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 141 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 216 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.


இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தமிழக பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அந்த அணி 150 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி கட்டத்தில் சட்டர்ஜீயும், பிரதிப்தா பிரமானிக்கும் மனஉறுதியுடன் போராடினர். சட்டர்ஜீ 40 ரன்னிலும், அடுத்து வந்த அசோக் திண்டா ஒரு ரன்னிலும் வெளியேறினர். அப்போது அந்த அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. 10-வது விக்கெட்டுக்கு இறங்கிய இஷான் போரெலுக்கு, ரஹில் ஷாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. கேட்டு தமிழக வீரர்கள் முறையிட்டனர். நடுவர் வழங்க மறுத்தார். அதற்குள் அவர்கள் ஒரு ரன் ஓடி எடுத்தனர். முடிவில் பெங்கால் அணி 82.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. பிரமானிக் 25 ரன்களுடன் (97 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா 5 விக்கெட்டுகளை அறுவடை செய்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 523 ரன்கள் குவிப்பு
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 523 ரன்கள் குவித்தது. அக்‌ஷாத் ரெட்டி இரட்டை சதம் அடித்தார்.
2. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணி 249 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணி 249 ரன்கள் சேர்த்தது.
3. ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-மத்திய பிரதேசம் ஆட்டம் ‘டிரா’
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் டிரா ஆனது. கடைசி நாளில் தமிழக கேப்டன் பாபா இந்திரஜித் சதம் அடித்தார்.
4. து ளி க ள்
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு- மத்திய பிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நத்தத்தில் நடந்து வருகிறது.