கிரிக்கெட்

தோனி மற்றும் ஹர்தீக் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்ட வேடிக்கையான தருணம் + "||" + MS Dhoni and Hardik shared a fun moment during Bollywood couple wedding reception

தோனி மற்றும் ஹர்தீக் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்ட வேடிக்கையான தருணம்

தோனி மற்றும் ஹர்தீக் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்ட வேடிக்கையான தருணம்
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி மற்றும் ஹர்தீக் வேடிக்கையான முறையில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
மும்பை,

இந்தி திரையுலகில் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில், கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது மனைவி சாக்ஷியுடன் இதில் கலந்து கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் மற்றொரு கிரிக்கெட் வீரரான ஹர்தீக்கும் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் தோனி, சாக்ஷி மற்றும் ஹர்தீக் ஆகியோர் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.  திடீரென சாக்ஷி சிரித்து கொண்டே புகைப்படம் எடுப்பதில் இருந்து விலகி திரைக்கு பின்னால் சென்று விட்டார்.  அவர் சென்றபின் தொடர்ந்து தோனியும், ஹர்தீக்கும் புகைப்படம் எடுத்தனர்.

அதன்பின் தோனியின் தோள் மேல் ஹர்தீக், கை போடுகிறார்.  அவரை கையை எடுக்கும்படி தோனி கேட்டு கொள்கிறார்.  ஆனால் தொடர்ந்து இருவரும் நிற்பது போன்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.  சாக்ஷியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் தோனி மற்றும் ஹர்தீக் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் 2வது  முறையாக இதுபோன்று புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொழுதுபோக்கிற்காக சிங்க வேட்டை; முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்த தம்பதிக்கு கடும் எதிர்ப்பு
பொழுதுபோக்கிற்காக சிங்கம் ஒன்றை வேட்டையாடி அதன் உடல் அருகே முத்தம் கொடுத்தபடி புகைப்படம் எடுத்த தம்பதிக்கு பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
2. இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர் - வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல்
பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர், இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்டார். இதனை வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
3. இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? - நடிகை கஸ்தூரி விளக்கம்
இஸ்லாமிய பெண் தோற்றத்தில் இருப்பதுபோல் சமூக வலைத் தளத்தில் வைரலான புகைப்படம் குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.